எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பு நுால். பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர், பொதுவுடமை சிந்தனை உடையவர் என பல கோணங்களில் காட்டுகிறது. கட்டுரைகளில் தனித்தன்மையுள்ள குணங்கள் தரப்பட்டுள்ளன.
தி.க.சி., செய்த அளப்பரும் செயல்களைப் பட்டியலிடுகிறது. எளிமையாக வாழ்ந்தவர்; தீய பழக்கம் ஏதும் இல்லாதவர்; புத்தகம், பத்திரிகைகளுக்கு இடையில் குடியிருந்தார் என குறிப்பிடுகிறது.
குடும்பத்தாரின் பக்தி செயலுக்கு இடையூறாக அவர் இருந்ததில்லை என்கிறது. நண்பர்களுடன் உரையாடல், கடிதம் என் சுறுசுறுப்பாக இயங்கியதை விரிவாக தருகிறது. மரணம் நெருங்கிய நேரத்திலும் மகிழ்ந்து விடை பெறுவதாக சொன்னது பற்றி வியப்புடன் பதிவு செய்துள்ள நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்