இறைவன் முருகன் அவயங்கள், தத்துவமாக விளங்கும் ஆறுபடை வீடுகளைப் பற்றி சுருக்கமாக அறிய உதவும் நுால்.
ஆறுமுகன் அவதாரம், நவ வீரர் உதயம், அசுரர் வதம் மற்றும் ஆறுமுகன் உறுப்புகள் தாத்பரியம் விளக்கப்பட்டுள்ளது. அருள் வடிவத் தத்துவங்கள் நிரல் படுத்தப்பட்டுள்ளன. ஆறுபடை கோவில் அமைப்பு, மூலவர் அமைப்பு, உள், வெளிப் பிரகாரங்கள், பிரசாத மகிமை, வழிபாடு, முக்கிய திருவிழாக்கள், திருத்தல புராண நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.
கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, திருப்புகழ், திருமுருகாற்றுப்படை இலக்கியங்களில் காணக்கிடைக்கும் சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகனின் அரிய தத்துவங்களை புரிய வைக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்