தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிப் புகழ் பெற்ற, மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெருமைகள் கூறும் நுால். கட்டுரைகளும், பாடலும் உள்ளன.
சுகுணசுந்தரி சரித்திரம், பெண்கல்வி, நீதிநுால் எழுதியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத் தொண்டு செய்வதை செயலில் காட்டிய பின்னணியை அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ்வதன் பின்னணியை எடுத்துரைக்கிறது.
உரைநடை, நகைச்சுவை, புனைக்கதையில் சிறந்திருந்ததை காட்டுகிறது. நீதி நுால்கள், சமரச கீர்த்தனைகளின் சிறப்புகளை எடுத்து கூறுகிறது. கருத்து பரப்பும் வழிகாட்டியாக செயல்பட்டதையும் குறிப்பிடுகிறது. வேதநாயகம் பிள்ளை பணிகளை எடுத்துக் கூறும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து