சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆய்வு செய்து அரிய கருத்துகளை தொகுத்து தரும் நுால். கண்ணகி, மாதவி, கோவலன் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.
சிலப்பதிகாரம் தொடர்பான உரைகள் மற்றும் ஆய்வுகளை விரிவாக தருகிறது. சிலப்பதிகாரப் பாடல்களில் மிகுந்து இருப்பதாகக் குறிப்பிடப்படும் இடைச்செருகல், பாடபேதங்கள் பற்றிய கருத்தோட்டங்களை விரிவாக ஆய்வு செய்து தகவல்களை முன்வைக்கிறது.
வஞ்சிக்காண்டம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் சமயக் கருத்துகளை தெளிவாக விவாதிக்கிறது. சிலம்பின் காலம், காண்டங்கள், காதை, பாடல்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு