காதல், மர்மம் பார்முலாவில் புனைந்துள்ள நாவல் நுால்.
தெய்வீக தகவல்களை பயன்படுத்திக் கொள்கிறது ஒரு குடும்பம். அந்த பலன்களை தொடர்ந்து பயன்படுத்தும் பேராசையில் தவறு நடக்கிறது. காமதேனு காட்சி அளித்த பெண்ணுக்கு பிறந்தது தெய்வீக பெண் குழந்தையாக பார்க்கப்படுகிறது. அந்த பெண் காதலில் விழுந்தபோது கொன்று விடுகிறது அந்த குடும்பம்.
அடுத்த முறையும் இதே போல் நடக்க பெரிய பிரச்னை ஏற்படுகிறது. காதலுக்கு எதிரான சக்திகளை கடந்து அது நிறைவேறியதா என்பது தான் கதை. தெய்வீகத்தின் பலனை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற பேராசை வெற்றி பெற்றதா? பரபரப்பான திருப்பங்களும், எதிர்பாரா முடிவும் உடைய நாவல்.
– ராம்