துன்பமில்லாமல் வாழ்வதற்கான புரிதல் நடைமுறையை வகுத்து தெளிவுபடுத்தும் நுால்.
எளிய விளக்கப் படங்களுடன் அன்றாட நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் வழிமுறைகளை கருத்தியல் ரீதியாக முன்வைக்கிறது.
மனித உறவு முழுமையாக வேண்டுமானால் புரிந்து கொள்ளுதல் என்ற முக்கிய நடைமுறை அறிவு மிக முக்கியமானது. அந்த பொருளின் உட்கூறுகளையும், அதை முழுமையாக செயல்படுத்துவதையும் வகுத்து தருகிறது. பேச்சு, செயல்பாடு, நடத்தைகளுக்கு புரிதலில் தரும் முக்கியத்துவத்தை முன் வைக்கிறது.
ஒவ்வொரு நிலையிலும் புரிதல் என்ற கருத்தியல் துல்லியமாக ஆராயப்பட்டுள்ளது. பொது வெளியில், உறவுகளில் முரண்பாடுகளை களையும் வழிமுறையை எடுத்துரைக்கிறது. அமைதியாக வாழ வழிகாட்டும் முக்கிய தமிழ் நுால்.
– மலர்