கந்தர் அலங்காரம் பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ள நுால்.
ஒவ்வொரு அலங்காரத் துதியையும் பதிவிட்டு முருகக்கடவுள் மீதான புராணக் கதைகள் தரப்பட்டுள்ளன. புராண அடிப்படையில் கந்தர் அலங்காரப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையுடன் தொடர்புபடுத்தியும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
முருகன் உருவ பெருமை, வேலனின் மயில், சேவலின் ஆற்றல், வள்ளியோடு இணைத்து கூறும் பாடல்களில் இன்ப உணர்வை காண முடிகிறது. கட்டுப்பாடற்ற புலன்களுக்காக வருந்துவது, அறியாமை நீக்க வேண்டுவது, மாயை வாழ்விலிருந்து மீட்க கெஞ்சுவது உருக்கமாக உள்ளது.
கந்தர் அலங்காரப் பாடல்களில் தெய்வீகத்தை உணர வைக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு