கலியுகக் கடவுள் அய்யப்பனை பற்றி முழுமையாக கூறும் நுால். வழிபடும் முறைகளையும் தெரிவிக்கிறது.
சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகளை தெரிவிக்கிறது. மலைக்கு செல்லும் வழிகள், அருகில் காண வேண்டிய இடங்கள், அய்யப்பனை உறங்கச் செய்யும் பாடல் வரலாறு என தொகுத்து தருகிறது.
விரத காலத்தில் நியமங்கள், உணவு முறைகள் பற்றி கூறுகிறது. நீல நிற ஆடைக்கு விளக்கம் தருகிறது. உணவு, உறக்கம், நீராடல் வழிமுறைகளை தெரிவிக்கிறது. அய்யப்ப பக்தர்கள் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் ரா.நாராயணன்