மகான் ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்களை விவரிக்கும் தொகுப்பு நுால். பிரம்ம விளக்கமாகவும், உணர்ச்சி திரளாகவும் தோன்றுவதை குறிப்பிடுகிறது. நீதியை ரத்தின சுருக்கமாக சொல்லி, நெடிய விவாதம் புரிந்ததை விளக்குகிறது. வாழ்க்கையை அறிவால் அறிந்து கொள்ள இயலாது என்ற தத்துவத்தை விளக்குகிறது.
வாழ்வில் சிரமப்பட்ட காலத்தில், பாபா கோவிலில் உண்ட பக்தர், அன்னதான உபயதாரரான நிகழ்வு சிலிப்பூட்டுகிறது. பாபா, நோய்களை தீர்த்தது பற்றியும் எடுத்துரைக்கும் நுால்.