ஒரு காலகட்டத்தின் வரலாறை பதிவு செய்யும் யதார்த்தமான சமூக நாவல்.
மண்ணின் உணர்வுகளை ரத்தமும், சதையுமாக உணர்த்துகிறது. கிராமத்து அழகியலை, மனிதர்களின் மன உணர்வுகளை, குணாதிசயங்களை, செயல்களை அப்படியே கண்முன் பதியச் செய்கிறது. அகிலாண்டத்துக் கிழவி துவங்கி, இதில் வரும் கதாபாத்திரங்கள் நிஜத்தை போலவே கண் முன் வந்து போகின்றன.
விவசாயக் கூலியான கலியன் வாழ்வு பற்றிய கதை. படிக்கப் படிக்க அந்தனுார் என்ற கிராமத்தில் மதவில் அமரும் ஆசுவாசத்தை தருகிறது. வாசிப்பவரை சம்பவ இடங்களுக்கே கூட்டிச் செல்கிறது.
ஏழைகள் நாணயமாகவும், பொதுநலம் மிக்கோராகவும் இருப்பதால் தான், மக்கள் மனதில் நீங்காது இடம் பிடிக்கின்றனர் என்ற உண்மையை நிறுவுகிறது. அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
– ஊஞ்சல் பிரபு