உலகின் தொன்மையான பழங்குடி இனத்தவரான செவ்விந்தியரிடையே பேசப்படும் கதைகளின் தொகுப்பு நுால். ஜோடனைகள் இல்லாத எழுத்து வடிவம் பெற்றுள்ளது.
பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்கள் சுவாரசியமும், பிடிப்பினையும் தருபவை. அது போல், அந்த சமூக மக்களால் பேசப்படும் கதைகளும் அது போன்றே ஆர்வம் ஊட்டுகின்றன. வாழ்வில் பின்பற்றும் நடைமுறைகள், அசைக்க முடியாத நம்பிக்கைகள், சடங்குகளை அடிப்படையாக கொண்டுள்ளன.
இயற்கை மீது மக்கள் கொண்ட ஈர்ப்பு மற்றும் கட்டுபாடற்ற சுதந்திர போக்கை கதைக்களத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. ஆச்சரியம் தரும் சம்பவங்களையும் உள்ளடக்கியது. எளிய நடையில் அமைந்துள்ள சிறிய கதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்