இதழ்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற, 11 கதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்ற தொகுப்பு நுால்.
தேசத்தின் மீதான அன்பையும், துணிச்சலையும் வெளிப்படுத்தும், ‘தேசம்தான் பெரிது’ என்ற கதை இலக்கிய பீடம் பரிசு பெற்றிருக்கிறது. விதவை இப்படித்தான் இருப்பர் என எதிர்பார்ப்போர் மீது கோபம் ஏற்படுத்துகிறது ‘வெள்ளைப் புடவையும் தையல் மிஷினும்’ கதை. நேர்மாறாக வாழ்வை அமைத்துக் கொள்வதை உரைக்கிறது. பெண்கள் மீது தனித்த அக்கறையுடன் வித்தியாசமாக உள்ளது.
பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணத்தையும், அதனால் ஏற்படும் தாக்கங்களையும் சுட்டிக் காட்டுகிறது, ‘கருப்பு வெள்ளை’ கதை. கதாபாத்திரங்களை கற்பனை வளத்துடன் அமைத்து புனையப்பட்டுள்ள நுால்.
– ஊஞ்சல் பிரபு