இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தை மையப்படுத்திய நாவல். மைசூரு பகுதியை களமாகக் கொண்டு வாழ்க்கை குறித்து அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகிறது.
மனிதன் விரும்பியபடி வாழ முடியாது. சுதந்திர எல்லைகளை, குடும்பம், சமூகம், அரசு அமைப்புகள் வகுக்கின்றன. இந்த அடிப்படையில் இரண்டு குடும்பங்களில் ஆறு முதன்மை கதாபாத்திரங்களுடன் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திருமணம் என்பது குடும்பத்தில் வம்சம் தளைக்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு என்ற மையக் கருத்தில் சுழல்கிறது. ஆண்களின் பார்வையை நுட்பமாக விமர்சிக்கிறது. வாழ்வில் கிடைத்ததை ஏற்றுக்கொண்டோர் எடுக்கும் முடிவு சரியானதா, வேண்டியதை போராடி பெறுவோர் செயல் நியாயமானதா என்ற விவாதம் சார்ந்த நாவல்.
– ஒளி