பகவத் கீதையுடன் மேலும் 25 கீதைகள் உள்ளதாக தெளிவை ஏற்படுத்தும் புத்தகம். அவற்றை எழுதிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அபிராமி பட்டர், பட்டினத்தார், அண்ணாமலை ரெட்டியாரை பட்டியலிட்டு காட்டுகிறது.
விரல்கள் பற்றி சின்முத்திரை விளக்கங்களோடு துவங்குகிறது. ஆண்டாள் பாசுரத்தில் கண்ணன் பெருமையை பாடி பரவசமடையும் போது, மழை பொழியும் அதிசயம் விளக்கப்பட்டுள்ளது. பெரியாழ்வார் பக்திக்கு கட்டுண்ட பரந்தாமன், தன்னை வாழ்த்த அனுமதி தந்ததே, ‘பக்திக்கு கிடைக்கும் பரிசு’ என சொல்லும் ஞானப் பொக்கிஷ நுால்.
– டாக்டர் கார்முகிலோன்