டெல்டா விவசாயத்தை பாதுகாக்க பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட நாவல் நுால்.
காவிரி நீர் கரை புரண்டோடும் காலத்திலும், வற்றி வறண்ட நிலையிலும் நீரை பாதுகாக்கும் வழிமுறையை சிந்திக்கிறது. டெல்டா விவசாயிகளுக்கு ஆதாரமான காவிரி நீர் உரிமை தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. காவிரி பிறந்த கதை துவங்கி, புராண வரலாறு, கிளை நதி விபரங்களை தொட்டுக் காட்டியிருக்கிறது.
காவிரி பாசன விவரங்களை சொல்லியிருப்பது நதியின் போக்கை அறிய உதவுகிறது. பாசனம் சார்ந்த அரசாணை பட்டியல் தனித்து கவனத்தை ஈர்க்கிறது. காவிரி நீரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை உள்ளடக்கிய நூல்.
– ஊஞ்சல் பிரபு