கணவனை இழந்த பெண் மறுமணம் செய்தால் சமூகம் ஏற்க மறுக்கும் சிக்கலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். ஆண் மறுமணத்தை தவறாக எடுக்காத சூழலை கவனப்படுத்துகிறது.
ஏழை பெண்ணின் வாழ்வு சம்பவங்களை மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. கதை நாயகி வீட்டு வேலை செய்பவர். கணவரும் நல்ல உழைப்பாளி. பணியாற்றும் முதலாளியிடம் பற்று உடையவன். அவ்வாறே மனைவியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
இவர்களுக்கு அழகான குழந்தை பிறக்கிறது. முதலாளி குடும்பத்தோடு நெருங்கியிருந்த இவர்கள் வாழ்வில் பெரும் சோதனைகள் அடுத்தடுத்து துன்பங்கள். அதிலிருந்து மீள முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது. குடும்ப கதாபாத்திரங்களை உடைய நாவல் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்