நாட்டார் வழிபாட்டு தகவல்களை அடிப்படையாக கொண்ட நாவல்.
குலதெய்வமாக தொண்டியம்மனை வணங்குவோர், பெண் பிள்ளைகளுக்கு அதே பெயரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளதை மையக் கருத்தாக உடையது. தொண்டியம்மா என்ற பெண்ணுக்கு நான்கு பிள்ளைகள். கடைசி குழந்தைக்கு ஏழு வயதான போது கணவரை இழக்கிறார். பின், பிள்ளைகளை வளர்ப்பது பற்றி நகர்கிறது.
வாழ்க்கை எந்த திசைநோக்கி பயணிக்கிறது என்பதை குடும்ப உணர்வுடன் கூறுகிறது. தொண்டி ஊரின் சிறப்புடன், அம்மன் உருவானதை நம்பிக்கை சார்ந்து சொல்கிறது. மக்கள் குணாதிசயங்களை, மண் மணத்துடன் கண்முன் நிறுத்துகிறது. அன்பு, பாசத்தை மறைக்கும் பணம் மற்றும் இறப்பின் கொடூரத்தை காட்டுகிறது. மத ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று பின்னணியுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்