நட்புக்கும், காதலுக்கும் இடையில் ஊசலாடும் மனதின் ஓட்டத்தை பிரதிபலிக்கும் குறுநாவல் நுால். உறவுச் சிக்கல் முடிச்சுகளை சொல்கிறது.
இளம் வயதிற்கே உரித்தான காதல் ஈர்ப்பை, ஆண்கள் எப்படி அணுகுகின்றனர், பெண்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதை கதை போக்கு தெளிவாக விளக்குகிறது. அதேநேரம், இக்கட்டான சூழ்நிலைகளை பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர், எப்படி முடிவு எடுக்கின்றனர் என்பதை அடிநாதமாய் காட்டுகிறது.
ஆண்கள் நிலைப்பாட்டையும் அடிக்கோடிடுகிறது. கதையின் போக்கு, வாசிப்பின் வேகத்தை கூட்டுகிறது. சிறு சிறு பத்திகளில் கதை சொல்லும் முறை தனித்து கவனத்தை ஈர்க்கிறது; கதை ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. ஒரே மூச்சில் படித்து விடக்கூடியதாகவே உள்ள சுவை குன்றாத நாவல் நுால்.
– ஊஞ்சல் பிரபு