சொந்த ஊரின் நினைவலை களை விரிவாக பதிவு செய்துள்ள நுால்.
காவிரி கிளைகளாகப் பிரியும் முக்கொம்பின் சிறப்பு, ஸ்ரீரங்கம் கோவில் அமைப்பு, வைணவப் பிரிவினரிடையே தோன்றி வளர்ந்த மோதல், ரங்கநாதரின் உருவச்சிறப்பு அம்சம் என சுவாரசியம் தருகிறது.
வழிபாட்டு முறைகள், ராமானுஜர் பணி ஏற்றபோது செய்த வழிபாட்டு மாற்றங்கள், ஆட்சியாளர்களுக்கு பயந்து சிலைகளை பாதுகாக்க பல இடங்களுக்கும் எடுத்துச் சென்றதை குறிப்பிடுகிறது.
ஸ்ரீரங்கம் கூட்டத்தில் காந்திஜி பேசியது, திருவானைக்கா பற்றிய தகவல்கள், பெருமை சேர்த்த பிரமுகர்கள் பற்றிய செய்திகள், வரலாற்று பண்பாட்டுச் சுவடுகள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. சுவையான வரலாற்று செய்திகளை உள்ளடக்கிய நுால்.
– ராம.குருநாதன்