வன்முறையாளர் சொல்வதை தட்டாமல் செய்யும் வேட்டை நாய் போன்ற ஏவல் ஆட்கள் குறித்து புனையப்பட்ட நாவல்.
துாத்துக்குடி துறைமுக பகுதியில் கடல் வாணிகம் செய்யும் குடும்ப வாரிசுகளுக்குள் நடக்கும் அதிகார யுத்தம் தான் கதைக்களம்.
இரண்டு சகோதரர்களையும், அவர்களுக்கு உதவும் அடியாள்களையும் மையப்படுத்தியது. அதிகாரம் யார் கையில் சென்று சேர்கிறது என்பதை பதைபதைப்புடன் விவரிக்கிறது.
வன்மமும், கோபமும் காலந்தோறும் இருப்பதையும், அதை கையில் எடுத்தோரின் வாழ்க்கைச் சூழலும் வன்முறை நிறைந்தது என்ற அடிப்படையுடன் நகர்கிறது. பழி வாங்கல், கடத்தல், காதல் என விறுவிறுப்பாக நீள்கிறது.
எளிய எழுத்து நடை கவர்கிறது. பகையுணர்வு உடையோரின் தனித்துவம் வேட்டை நாய் என ஒப்பிடும் நாவல்.
– ஊஞ்சல் பிரபு