மாறுபட்ட முயற்சியில் மலர்ந்துள்ள நாவல். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் கிரைம் நாவலைப் படைத்திருப்பது புதுமை.
திருட்டோ, கொலையோ, பேராசையோ, சுயநலம், குரூர புத்தியால்தான் நடக்கும். மர்மக் கதை என்றாலே குற்றவாளி தவறு செய்வான். கதாநாயகன் அதை தடுக்கவும், மடக்கவும் போராடுவான். இந்த கதையில் கதாநாயகனுக்கு இணையாக முக்கியத்துவம் குற்றவாளிக்கு தரப்பட்டுள்ளது.
இறுதி வரை கதாநாயகனுடன் பயணிக்கிறான். திருப்பங்கள் இருந்தாலும் இறுதியில் நடப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. முடிவும், மாறுபட்ட அணுகு முறையாக உள்ளது. பரபரப்புகளுக்கு பஞ்சமின்றி விறுவிறுப்பான நடையில் உள்ளது. வாசித்து மகிழ ஏற்ற நுால்.
– இளங்கோவன்