சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி திவ்ய தேசங்களில் பெருமாள் தரிசனத்துக்கு வழிகாட்டும் புத்தகம்.
திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி மீசையுடன் தரிசனம் தருவதை விவரிக்கிறது. வாக்கூரில் இடுப்பில் வாளுடன் தரிசனம் தருவது புண்ணிய செய்தி; பலருக்கும் இது புதிது. தரிசனப் பலன்கள், செல்வதற்கான வழித்தடம், திவ்ய தரிசன நேரம் என பயனுள்ள குறிப்புகள் உள்ளன.
பொறாமையால் கெடுதல் செய்வோர் அதிகரிக்கும் காலம் இது. பவளவண்ணம் பெருமாளிடம் முறையிட்டால் இந்த குறைகள் தீர்க்கப்படும் என்ற ஐதீகத்தை குறிப்பிடுகிறது. காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் பெருமாள் தரிசனம் தருவதை சிறப்பாக குறிப்பிடும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்