தாத்தாவின் நினைவில் பேத்தியே உணர்வுமயமாக எழுதியுள்ள நுால். இளமைப்பருவ நிகழ்வுகளை நெகிழ்வான மனநிலையில் வெளிப்படுத்துகிறது.
தாத்தா என்ற முதுமையை ஒருவகை கம்பீரத்துடன் உருவகப்படுத்தி காட்டுகிறது. அறையில் பார்த்த பெண்ணின் படத்தை விவரித்து காட்சிப்படுத்துவதுடன் துவங்குகிறது. எண்ணம் முழுதும் தாத்தாவே நிறைந்திருப்பதை மகிழ்வுடன் வெளிப்படுத்துகிறது.
குழந்தை பருவ நிகழ்வுகள் எளிய வர்ணனையுடன் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முதியவரின் ஆற்றலை, செயல் திறனை, நடவடிக்கைகளை அனுபவ பாடத்தின் வழியாக விளக்குகிறது. ஒவ்வொரு வரியிலும் இனிமை கலந்த நினைவு சிதறல்களை காண முடிகிறது. அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த நடைமுறைகளையும் வெளிப்படுத்துகிறது. நினைவுகள் நிறைந்த நுால்.
– மதி