காதல் உண்டாக்கும் அவஸ்தையான வலியை அதன் தன்மை மாறாமல் விவரிக்கும் வட்டார வழக்கிலான நாவல் நுால்.
காதல் தோய்ந்த ஒரே கருத்து பல வடிவங்களில் பயணப்படுகிறது. முத்துசாமி, வள்ளிநாயகி உறவு, அதை எதிர்கொள்ளும் விதம், உள்ளுக்குள் உறைந்து நிற்கும் காதல், சுற்றி இருப்போர் எடுக்கும் நிலைப்பாடு, வெப்பம் தகிக்கும் பிரிவின் தவிப்பு என நீள்கிறது கதை. முன்னாள் காதலியை சந்திக்கையில் ஏக்க அலைகளில் நீந்தும் தவிப்பை விவரிக்கும் இடம் அருமை.
உறுத்தாத நெல்லை தமிழ் சுவாரசியத்தை ஊட்டுகிறது. வலியை தென் மாவட்டங்களில், ‘வேத’ என குறிப்பிடுவதால் அதுவே தலைப்பாக்கப்பட்டுள்ளது. வேத யாருக்கும் தேவையில்லை என்றாலும் கேட்டு வருவதா காதலின் வலி. ஒரு சுகமான அவஸ்தை. காதல் வயப்பட்டுள்ள பிரியர்கள் படித்து ரசிக்கலாம்.
– ஊஞ்சல் பிரபு