குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட நாவல் நுால்.
தங்கையிடம் தீவிர பாசமுள்ளவர் அண்ணன். அவருடன் கல்லுாரியில் படிப்பவர் தங்கையை காதலிக்கிறார். அண்ணனும், ஒரு பெண்ணை காதலிக்கிறார். தங்கை வாழ்க்கையை சுற்றி படர்கிறது கதை. அண்ணன், தங்கை கேலி, சண்டை, விளையாட்டு கடந்த பாசத்தை, உணர்வுப்பூர்வமாக சொல்கிறது.
அண்ணன் காதலுக்கு தங்கை உதவுவது, பெற்றோருக்கு தெரியாமல் முடிவு எடுப்பது, காதல் வெற்றி பெற உறவினர்களை பங்களிக்க வைப்பது என பின்னலாக உள்ளது. பிரிவின் வலி, உருக வைக்கும் சகோதர பாசம் என நகர்கிறது. பிள்ளைகளின் காதலை பெற்றோர் கையாளும் விதத்தை, வாழ்வுடன் முடிச்சு போடுகிறது. உறவு பெயரிலே உலாவும் கதாபாத்திரங்கள் உடைய சுவாரசியம் மிக்க நாவல் நுால்.
– டி.எஸ்.ராயன்