பழங்குடி இனப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாற்றிய அனுபவங்களின் சாரமாக மலர்ந்துள்ள நுால். சுய அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது.
அனைத்து படைப்புகளும் பெண்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தியதாகவே உள்ளன. எழுத்துகளில் ஆங்காங்கே நகைச்சுவை, சோகம், மகிழ்ச்சி கலந்து சுவை ஊட்டுகிறது. விரிவான புத்தக வாசிப்புத் திறன் ஒரு கட்டுரையில் வெளிப்பட்டுள்ளதை காண முடிகிறது.
மகிழ்ச்சி தரும் ஊஞ்சலை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது. பிறந்த நாள் முதலே குழந்தைகளை தொட்டிலில் போட்டு ஆட்டுவது குறித்த நெகிழ்வை தெரிவிக்கிறது. வாழ்வை பிறர் பார்வையில் அல்லாமல், சுய விருப்பத்துடன் அமைத்துக் கொள்ள வழிகாட்டும் நுால்.
– ராம்