ஆத்திசூடி அறக்கருத்துக்கள் மனதில் பதியும் வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆழமான பொருட்களை உணர்த்துகின்றன.
புதைந்திருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தும் இயல்வது கரவேல், இயல்வது விலக்கேல், ஒப்புரவு ஒழுகு போன்ற வரிகள், கொடை பண்பைத் தாங்கி நிற்கின்றன. ‘நுண்மை நுகரேல், தையல் சொல் கேளேல்’ தொடர்களில் உள்ள பொருள் நுட்பம் விளக்கப்பட்டுள்ளது.
‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்ற தொடர், பொருள் தேடுவது மட்டுமின்றி அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என விவரிப்பதை எடுத்துரைக்கிறது. போக்குவரத்து விதிகளை மதிக்க கற்றுத்தருகிறது, ‘சக்கர நெறி நில்!’ ஆத்திசூடி அறக்கருத்தை சிறுகதைகளின் வழியாக விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்