விலைரூ.45
புத்தகங்கள்
தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா.,
விலைரூ.45
ஆசிரியர் : கார்த்திகேசு சிவத்தம்பி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: தமிழ்மொழி
Rating
பக்கம்: 56
பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளை, ஊர் ஊராய் அலைந்து தேடிக் கண்டெடுத்து மீட்டு, அவற்றை அச்சில் ஏற்றித் தமிழைக் காத்த, பெருந்தகை தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா.,வின் பதிப்புப்பணியைப் பாட விமர்சனவியல் நோக்கில், இலங்கை - ஈழத்தமிழறிஞர் கா.சிவத்தம்பி ஆழ்ந்து, ஆய்ந்து இந்நூலை ஆக்கித் தந்துள்ளார். உ.வே.சா., போலவே, சி.வை.தாமோதரம் பிள்ளையும், தமிழ்நூல்களை மீளப் பதிப்பித்தவர் என்னும் சிறப்புக்குரியவராவார்.
சீவகசிந்தாமணி(1887) சிலப்பதிகாரம்(1892) புறநானூறு(1894) பத்துப்பாட்டு(1889) ஆகியவை, உ.வே.சா.,விற்கு பெரும் புகழைத் தேடித்தந்த பதிப்புகளும் முக்கியமானவை. ஐயரவர்களின் ஈடுபாடு சமண, பவுத்த மதங்களை அறிவதில் பெரிதும் காணப்பட்டது. உ.வே.சா.,விற்கு இலங்கை அறிஞர்களும் உதவியுள்ளனர். தமிழின் நவீனமயவாக்கம், தமிழகத்தில் நடந்தேறியதிலும், பார்க்க மிக ஆழமாகவும், அதே வேளை மிக்க விரைவுடனும், இலங்கையில் நடைபெற்றதெனலாம்.இப்படிப் பல அரிய கருத்துகளை அறிய நூலைப் படிப்பது அவசியம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!