மார்க்கண்டேயர் சீடனுக்கு சொன்ன புராண கதை நுால்.
புராணத்தில் அரிச்சந்திரன் கதை முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளது. நளாயினி கதை, நரகலோகத்தின் தண்டனைகள், பிராணயாம பயிற்சி, மகிஷாசுர வதமும் இடம்பெற்றுள்ளன. படித்தாலும், கேட்டாலும் அமிர்தகடேசுவரர் ஆசி கிடைக்கும் என்கிறது.
மார்க்கண்டேய புராணத்தை அறியும் வகையில் எளிய தமிழில் அமைந்துள்ளது. சமஸ்கிருத சுலோகங்களை, அதே மொழி வடிவத்தில் சேர்க்காமல் முழுதும் தமிழில் அமைந்துள்ளதால் படிப்பதற்கு சுவை கூட்டுகிறது. மனித குலம் கடந்து வந்த பாதையைக் கூறுவது வரலாறு. இந்த புராணத்தில் வரலாற்று செய்திகளும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்