இலக்கியத்தில் கதையாடல், நாடக ஆக்கம், மொழிபெயர்ப்பு சிறப்பை எடுத்துரைக்கும் நுால். நாட்டுப்புற இலக்கியங்களில் வாய்மொழிக் கதைகளுக்கு இருந்த முக்கியத்துவமும், அதனால் ஏற்பட்டு வரும் பயன்களும் அலசப்பட்டுள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களும், விளக்கங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன. பெரியசாமித்துாரனின் படைப்புகளில் சமுதாயம் சார்ந்த சிந்தனை, வழிகாட்டுதலை அறிய தருகிறது.
நுண்ணிலைக் கற்பித்தல் முறை குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளது. பெண்ணிய கவிஞர் படைப்புகளில் கருத்துகளும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து புதுமுக எழுத்தாளர் படைப்பு பற்றியும் திறனாய்வு செய்துள்ளது. தாய்மொழியில் ஊடகத்தின் அவசியம் பற்றியும் தெளிவாக பேசியுள்ள நுால்.
– முகில்குமரன்