குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு அறிவுரை தரும் நுால். தாய்ப்பால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. குழந்தைக்கு எதிர்மறை சிந்தனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திட்டுதல், விமர்சித்தல், அடித்தல், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுதல் போன்ற செயல்பாடு, எதிர்மறை சிந்தனையை வளர்க்கும் என தெளிவுபடுத்துகிறது.
தட்டிக்கொடுத்தல், பாராட்டுதல் தான் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் என்கிறது. அளவுக்கு அதிகமான கண்டிப்பு, தவறான நடத்தையை துாண்டும் என எச்சரிக்கிறது. பெற்றோருக்கு இடையே ஏற்படும் சண்டை, குழந்தை மனநிலையை பாதிக்கும். குழந்தை வளர்ப்பு பற்றி தெரிவிக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்