உலகம் தோன்றிய காலத்தில் மனிதன் சாப்பிட்ட பச்சைக்காய், மாமிசம் எல்லாம் இன்று முன்னேற்றம் பெற்றுள்ளது.
இந்த முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது... உலகின் முதல் நாகரிகம் எது... இன்றைய நாகரிகம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது இந்த நுால். மனிதகுலம் எப்படி தழைத்து செழித்தது என்று அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேனமிர்தம். பொது அறிவு பெட்டகமாக திகழ்கிறது.
நான்கு திசைகளின் நாடு என்ற கேள்வி போட்டித்தேர்வில் வருமானால் அதற்கான விடை இருக்கிறது. பாரத தேசம் கொண்டாடும் வேதங்கள் எந்த ஆண்டில் பிறந்தன. வேதகால நாகரிகம் எப்படி இருந்தது என்ற சுவையான தகவல் இந்நுாலில் இடம் பெற்றிருக்கிறது.
– தி.செல்லப்பா