சங்க இலக்கியமான குறுந்தொகையில் பாடல்களை தேர்வு செய்து, தற்கால நடையில் புனைகதைகளாக தந்திருக்கும் நுால்.
காதல் வாழ்வில் ஐந்து திணைகளையும் சுற்றி புனையப்பட்டுள்ளன. ஐந்து வகை நிலங்களின் தலைவன், தலைவி, தோழி என மாந்தர்களை கொண்டு பின்னப்பட்டுள்ளன.
குறுந்தொகை பாடல்களில் பொதிந்த காதல் உணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய தமிழர் பண்பாட்டு கூறுகளை அறிய வைக்கிறது.
ஒவ்வொரு கதைக்கும் உரிய குறுந்தொகை பாடலுடன் சொற்பொருள், பொருள் தந்திருப்பது, விளங்கிப் படிக்க உதவுகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு