தமிழ்மொழி மீது தனித்தமிழில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். யாப்பிலக்கண மரபுப்படி இலக்கணம் பிறழாமல் படைக்கப்பட்டுள்ளது. சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய பாடல்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
இந்த புத்தகம், தமிழ்த் தாயையே தெய்வநிலையில் வைத்துப் பாடப்பட்டுள்ளது. நேரிசை வெண்பா, கட்டளைக்கலித்துறை, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை ஆசிரியப்பா வகைப்பாட்டில் அமைந்துள்ளது.
அனைத்தும் அந்தாதி தொடையில் பாடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாட்டும் தமிழ் செவ்வியல் இலக்கிய பெருமையைப் பறை சாற்றுகிறது. எளிமையான மரபு செய்யுள்களை உடைய நுால்.
– குமரன்