உலக அளவில் அழியாத தடம் பதித்த திரைப்பட வல்லுனர்களின் தொழில் நுட்பங்களை திறனாய்வு செய்யும் தொகுப்பு நுால்.
திரைக்கதை, படப்பிடிப்பு நுணுக்கங்களில் தனி முத்திரை பதித்த சினிமா இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட உலக ஆளுமைகள் பயன்படுத்திய உத்திகளை அறிய வைக்கிறது.
ஜப்பானிய இயக்குநர்கள் குரோசா, அக்னஸ் வார்தா துவங்கி, இந்தியாவில் சத்யஜித்ரே, பாலு மகேந்திரா, மகேந்திரன் என பலரின் சாதனைகளை முன்வைக்கிறது.
செல்லுலாயிட் காலம் துவங்கி, நவீன டிஜிட்டல் படப்பிடிப்பு வரை தொழில் நுட்ப மாற்றங்களை பதிவு செய்துள்ளது. காட்சியமைப்பு, உரையாடல்கள் பற்றிய கருத்தோட்டம் இன்றைய தலைமுறைக்கு பயன் தரும். திரைப்பட ஆர்வலர்களுக்கு உகந்த நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு