இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். நீதிமன்ற வளாகத்திலும், சமூக வெளியிலும் கண்ட நிகழ்வுகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு படைப்பின் இறுதியிலும் பொருத்தமான சட்ட விதிமுறை தரப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பு, கதை போல் அமைந்து உண்மைகளின் பின்னணியை வெளிப்படுத்துகிறது. உரையாடல் வழியாக கருத்தை முன்வைத்து, சட்ட விதிகளுடன் பொருத்தி விடை தேடும் பாணியில் அமைந்துள்ளது. சமூகத்தில் யாரும் பார்க்கத் தவறும் நிகழ்வுகளை, பல கோணங்களில் நோக்கி அலசுகிறது. பொது வெளியை அன்றாடம் கவனித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. சிக்கலான நிகழ்வுகளை தீர்த்து வைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. பரிவுமிக்க சமூக பார்வையுள்ள நுால்.
– ராம்