சித்ராலயா என்றாலே கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை படங்கள் நினைவுக்கு வந்து விடும். இவற்றில் நகைச்சுவைப் பகுதியைக் கவனித்தவர் கோபு. அவரது அனுபவங்கள் சுவை குன்றாமல் பதிவாகியுள்ளது.
படித்தால், இப்படி ஒரு சுயசரிதையா என்று ஆச்சரியப்பட்டு போவீர்கள். காதலிக்க நேரமில்லை போல இன்னொரு படத்தை உருவாக்க முடியாது என்று சினிமா உச்சத்தில் இருப்பவரே ஒப்புக்கொண்டது பற்றியும் உள்ளது.
வெளிநாட்டு படப்பிடிப்பில், ஊறுகாய் சமாச்சாரம் ஒன்று நடந்தது; இதற்கு சொந்தக்காரர் நடிகர்திலகம். அது என்ன விஷயமாக இருக்கும்? புத்தகத்தைப் படித்தால் ஊறுகாய் மாதிரி சுவைக்கும்.
– தி.செல்லப்பா