செயல்திறன் மிக்க சிந்தனையை துாண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்களுக்கு தன்னம்பிக்கை, பொறுப்புணர்வை ஊட்டும் வகையில் உள்ளது.
குடும்ப வாழ்க்கை, வேலைக்கு செல்லும் பெண், அவசரக் காதல், தாழ்வு மனப்பான்மை, தரம் கெட்ட பொழுதுபோக்கு, வரதட்சணை, மோசடி கல்யாணம் போன்ற மையக்கருத்தில், 46 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அன்றாட வாழ்வில் அனுபவங்களை விமர்சனப்பூர்வமாக அணுகி எழுதப்பட்டுள்ளது.
எளிய மொழி நடையில் கதை சொல்வது போல் அமைந்து தேசப்பற்றை ஊட்டுகின்றன. சிந்தனையை துாண்டும் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ராம்