வாழ்க்கையில் தடைகளை கடந்து வெற்றிக்கான வழிமுறைகளை தரும் நுால்.
தேடல் தான் இயல்பான வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் என்கிறது. உடல், மனம் இதில் எது பாதித்தாலும், இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படும்; பணம் சம்பாதிப்பதில் நேர்மையான உழைப்பு இருக்க வேண்டும் என்கிறது. கல்வி தான் அனைத்துக்கும் மேலானது என வலியுறுத்துகிறது.
பேச்சில் தெளிவும், தெரியாது என்பதை கூற துணிவும் தேவை என்கிறது. வாழும் வாழ்க்கை முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. மதங்கள் அன்பை போதிப்பதாகவும், மக்களை பிரித்து ஆளும் சூழ்ச்சிக்கு பயன்படுத்துவதாகவும் எச்சரிக்கிறது. மதக் கட்டளைகள் மனிதநேயம் போதிப்பதை கூறுகிறது. வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்