வள்ளுவர் வகுத்த அறக்கோட்பாடு அடிப்படையில் வாழ்வில் உயரும் சிந்தனைகளை முன்வைக்கும் தொகுப்பு நுால். அற வழியில் ஆட்சி நடத்தும் மாட்சி மற்றும் மருத்துவ நெறிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வள்ளுவரின் குறள் கருத்தை முன்வைத்து நாலடியார், சங்க இலக்கிய மேற்கோள் வழியாக விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் படித்த படிப்போ, பெற்ற பட்டங்களோ, செய்த ஆராய்ச்சிகளோ சாதனையாளராக உதவுவதில்லை.
மாறாக பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், அன்பு காட்டுதல், உதவும் பண்புகளை சாதனையாளராக மாற்றும் என்கிறது. வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்