பன்மொழி வித்தகர் சதுர்வேதி சுவாமியின் உயர்ந்த குணங்களை விளக்கும் நுால்.
சிறுவர்களுக்கு சுவை உணவு கொடுத்து மனதில் மாற்றம் ஏற்படுத்துவதை குறிப்பிடுகிறது. கஷ்டப்படும் குடும்பத்தாருக்கு உதவுவதை உயர்வாகக் கூறுகிறது. சுவாமியின் விருந்தோம்பல் பண்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கேட்டால், பொறுப்பாக அதற்குரியபதிலை எழுத்தில் கொடுத்து விட்டு, காரியம் நிறைவேறும் வரை மறக்காமல் விசாரிப்பதை கூறுகிறது. மற்றவர் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனமாக இருப்பதை எடுத்துக்காட்டுகள் வழியாக தருகிறது. பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் பாராட்டியதை குறிப்பிடுகிறது. ஆன்மிக அன்பர்கள் படிக்க வேண்டிய நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து