அமெரிக்க சட்ட திட்டங்கள், மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் நுால்.
இங்கிருந்தபடி கேட்ட, படித்தவை, நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பதை சம்பவங்கள் வழியாக சுட்டிக்காட்டுகிறது.
உறவு முறை, பொருளாதாரம், மருத்துவ முன்னேற்றத்தை புதிய கோணத்தில் சொல்கிறது. காலை திருமணம், மாலை விவாகரத்து என்பதில் உண்மையில்லை என்கிறது.
பாடத்திட்டத்தில் பின்பற்றப்படும் சமத்துவ நடைமுறையை கூறுகிறது. மருத்துவம் உட்பட பல துறைகளில் தொழில்நுட்பம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பகிர்கிறது. அமெரிக்க வாழ்க்கை முறை, இந்திய கலாசாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அலசுகிறது.
சமூக தோட்ட அமைப்பு, கூடி பயிர் செய்வதால் சுற்றுச்சூழல் மேம்பாடு என புரிதல் ஏற்படுத்தும் நுால்.
– டி.எஸ்.ராயன்