இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் பி.எல்.சாமியின் இலக்கியப் பணிகளைச் சிறப்பிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள நுால்.
சாமியின் பிறப்பு, கல்வி, அரசுப்பணி செயல்பாடுகள், ஆய்வுப்பணிகள், முன்னோர் பற்றிய குறிப்புகளோடு சங்க இலக்கியப் புலமை, தமிழியல் ஆராய்ச்சிகள், கவித்திறன், தொல்லியல் ஆராய்ச்சி, ஒப்பாய்வுத் திறன் என பலவற்றையும் அறியச் செய்கிறது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் விலங்கு, பறவை வகைப்பாடுகளை ஆராய்ந்ததை விவரித்துக் கூறுகிறது. மீன்கள், மணிகள், பூச்சிகள் பற்றிய ஆய்வு செய்ததையும், கம்பன் காவியத்தில் உயிரினங்கள் பற்றிய ஆய்வையும் குறிப்பிடுகிறது. ஆய்வு நோக்கில் படிக்க உகந்த நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு