இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நீரின்றி அமையாது உலகு என நிறுவியிருக்கும் பாங்கு வியப்புக்குரியது. அன்னையின் மாண்பு, செயல்திறனின் சீர்மை, வீரத்தின் வீச்சு, சிந்தனையில் தெளிவு, தெரிந்ததை தெளிவாகப் பேசு, தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற தலைப்புகள் சிந்தனையை துாண்டுகின்றன. ஞாயிறு முதல் வெள்ளி வரை இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்களில் பாடுபொருளாக அமைந்துள்ள பாங்கை விவரிக்கிறது.
இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும் என சங்ககால அகநானுாற்றுப் பாடல்களை மேற்கோள் காட்டி வாழ்வு நெறி விளக்கப்பட்டுள்ளது. மதம் என்பது இறைவனடி தேடி நடக்க வேண்டிய பாதை என வலியுறுத்துகிறது. இலக்கியத்தில் பன்மணி திரளாக அமைந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்