வழக்கறிஞர் தொழிலில் பெற்ற அனுபவங்களை பகிரும் நுால். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தன் தந்தை பற்றி கூறப்பட்டுள்ளது. தாத்தா காலத்தில் நடந்த நிகழ்வுகள், அப்போதைய உரையாடல்களை தெளிவாக பதிவு செய்கிறது. பெற்றோரின் சிரமங்களை எடுத்து சொல்கிறது. வறுமையால் கஞ்சி மட்டும் குடித்து வாழ்ந்ததைக் காட்டுகிறது. வறுமையிலும் படித்தது, முன்னேற துாண்டுகோலாக இருந்தவை குறித்து விவரிக்கிறது.
சக வழக்கறிஞர்களுடனான அணுகுமுறை குறித்து பேசுகிறது. உடல்நலக் குறைவின் போது கிடைத்த ஆறுதலை பகிர்கிறது. தடைகள், துன்பங்களை கடந்து சாதனை இலக்கை அடைவது எப்படி என்கிறது. தோல்வியில் துவண்டு விடாமல், நேர் வழியில் வெற்றிப்படி ஏறலாம் என நம்பிக்கையூட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்