வாழ்வியல் மதிப்புகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கல்விக்கு அவ்வையார் கொடுத்த முக்கியத்துவத்தை தனித்துவத்துடன் விளக்குகிறது. செல்வம் சுற்றிக் கொண்டிருப்பதால் பலருக்கும் பயன்படுவதை எடுத்துரைக்கிறது. ரூபாய் நோட்டு எவ்வாறெல்லாம் மதிப்பு பெறுகிறது என்பதை விளக்குகிறது. என்ன செய்கிறோம் என்பதில் இல்லை; எப்படி செய்கிறோம் என்பதில் தான் கடமை உணர்வு வெளிப்படுவதாக எடுத்துரைக்கிறது.
பொறுமையின் பெருமையை கூறுகிறது. சிகரத்திற்கு செல்லும் வழிகளை சொல்கிறது. புகழ்பெற்ற திரைப்பாடல்கள், இலக்கியத் தொடர்கள், சிந்தனை தொடர்களுடன் கருத்துப் பெட்டகமாக அமைந்துள்ளது. வாழ்வின் மதிப்பை அனுபவமாக சொல்லும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்