அனுபவ முத்துகளாலான கட்டுரை நுால். கவிதை உறவு அமைப்பு வழியாக பலரை சொந்தம் ஆக்கியவரின் அனுபவங்கள் பதிவாகியுள்ளன.
‘கம்பீரமாக இருக்கலாம்; ஆனால் கர்வமாக இருக்கக்கூடாது’ என்பதை முன்வைத்து நிகழ்வுகளை சொல்கிறது. இடைவெளியே இல்லாத தாய் என்ற உறவு ஒரு துளியை, துாளி வரை கொண்டு போகும் என்கிறது. அம்மா என்று சும்மா சொல்லிக் கொண்டிருந்தாலே கவசமாய் காக்கும் என்கிறது.
பேச்சு என்பது மேடைக்கு மட்டுமல்ல; கலந்து உரையாடவும், கேள்விக்கு பதில் சொல்லவும், இதமாக பேசுவதற்கும் பயன்படும். இதயம் தொடுவது, சிரிப்பூட்டுவது, சிலிர்ப்பூட்டுவது, சிந்தை தொடுவது என பேச்சுக்கலையை உச்சத்தில் கொண்டாடுகிறது. வாழ்வில் சுவைத்த அனுபவங்களை தரும் நுால்.
– ராம்