பூமியில் நீர்வளத்துக்கு அடிப்படையானது மரம் என்ற கருத்துடன் துவங்கும் நுால். வாழை மரத்தின் சிறப்பையும் புரிய வைக்கிறது.
முருங்கை மரமும், பசுவும் உள்ள வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்ற பழமொழிக்கு விளக்கம் கூறுகிறது. முருங்கை மரத்தை ஒடித்து வளர்க்கவேண்டியதற்கு உண்மை காரணத்தை உணர்த்துகிறது.
தமிழகத்தின் மாநில மரமாக பனை இருப்பதற்கான காரணத்தை எடுத்துரைக்கிறது. பனை மரத்துடன் தென்னை, வேம்பு, இலுப்பை, புளி, அரசு, ஆல் உள்ளிட்ட 16 மரங்கள் பற்றி கூறுகிறது. ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மரங்களுடன், மனிதர்கள் கொண்டிருக்கும் தொடர்பையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் எளிமையாக எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்