பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால், அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வு தோன்றும். அவளே நம் இந்திய தாய்.
வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள்.
புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க, 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது.
அதை விவரிப்பதுடன், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, உஜ்ஜயினி மங்கள சண்டி, நேபாளத்து குஹ்யேச்வரி,
கல்கத்தா காளி என, பாரதம் முழுக்கப் பரவியிருக்கும், 51 சக்தித் திருத்தல மகிமை மற்றும் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தளிக்கிறது இந்த நூல்.
கவுதம நீலாம்பரன்