‘வானமழை நீ எனக்கு’ நாவலில், அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தரமாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள்.
எழிலாக வளைய வந்து ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் சக்கர நாற்காலியில் புன்னகையுடன் எதிர்கொள்வாள். இந்த தேவதைக்கா இந்த நிலை என்று மனம் கதறும். அறுவை சிகிச்சைக்கு பின் இறைவன் ஆயுளைத் தந்தானே என்று ஆறுதலும் சொல்லிக் கொள்ளும்.
இறைவனை நினைத்து கசிந்துருகுவது போல அன்பு கொண்ட மனமும் கண்ணீர் மல்கும். இதற்கென்று காதல், காமச்சாயம் தேவையில்லை. எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட தேவதையும், அறிவால் ஈர்க்கப்பட்ட ஆசிரியரும் சந்திப்பது அழகு.
‘அல்லல் படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்’ என்று ஆசிரியர் பிரார்த்தனை செய்வதன் அர்த்தத்தை, ‘நெஞ்சினில் ரஞ்சனி’ நாவலின் மூலம் தெரிந்து கொள்வதே சிறந்தது.
–
எம்.எம்.ஜெ.,